நம்மிடமே இருக்கு மருந்து... வெள்ளரிக்காய் !

குறைவான கலோரி மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது, வெள்ளரிக்காய்.

இதில், சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம் மற்றும் குளோரின் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகமுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை சிறிது சிறிதாக அதிகரிக்கிறது.

அப்படியே உண்ணத் துாண்டும் வகையில் தனிச் சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. வெள்ளரியில் உள்ள நீர் சத்து, நாக்கு வறட்சியை போக்குவதுடன், பசியை தூண்டும்.

இரைப்பையில் ஏற்படும் புண், மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. பித்த நீர், சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

இளநீரை போன்றே, வெள்ளரிக்காய்ச் சாறும் உள்ளது. வயிற்றுப்புண் இருந்தால், இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை, ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு குடித்தால், நிவாரணம் கிடைக்கும்.

வறண்ட தோல் மற்றும் முக வறட்சி உள்ளோர், தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வர, வறட்சித் தன்மையை போக்கும்.

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், எடையை குறைக்க, விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை உட்கொள்ள வேண்டும்.