பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஏன் தவிர்க்க வேண்டும்?
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக இனிப்பு, உப்பு மற்றும் ஃபுட் கலர்ஸ், கெடக்கூடாது என்பதற்காக சேர்க்கும் ரசாயனங்கள் போன்றவை காணப்படும்.
குக்கீகள், சோடா, டோனட்ஸ், கேண்டி மிட்டாய், பீஸ்ஸா, சிப்ஸ் மற்றும் கிராக்கர்ஸ், துரித உணவுகள் போன்றவை இதில் அடக்கம்.
குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் உடல் பருமன் அதிகரிக்க முக்கிய காரணமாகும்.
மார்பக, புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
குழந்தைகளுக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
சோடியம் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் போன்றவை அதிகப்படியாக இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் ஏற்படும்.
உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தியை, வயிற்று போக்கு ஏற்பட கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.