வெரிகோஸ் பாதிப்புக்கு காரணமும், தீர்வும்!!
பெரும்பாலும் 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் வெரிகோஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அதிக நேரம் நிற்கும் போது ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாகி இருப்பதால் நாளங்கள் தடிமனாகி பெருத்து ரத்தம் உறைந்து ரத்த ஓட்டம் அந்தப்பகுதியில் நின்று போகும்.
பொதுவாக ரத்த நாளங்கள் மனித உடலில் ரத்தத்தை பம்பிங் செய்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக கொண்டு செல்ல வேண்டும்.
நின்று கொண்டிருப்பதால் பாதத்திற்கு செல்லும் ரத்தம் மீண்டும் பம்பிங் ஆகி மேல் செல்வதற்கு வழியில்லாமல் போய் விடும்.
இது போன்ற பாதிப்பில் உள்ளவர்கள் ஆரம்ப நிலையில் வந்தால் அவர்களுக்கு இயற்கை யோகா சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.
பெரிய பாதிப்பு ஏற்பட்டால் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
வெரிகோஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரிவர்ஸ் மசாஜ் மூலம் சிகிச்சை அளிப்பது நல்ல பலன் தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வலியில் இருந்து விடுபட சுடு நீரில் ஒத்தடம், குளிர்ந்த நீரில் மாறி, மாறி ஒத்தடம் கொடுக்கலாம். முன்புறம் குனிவது போன்ற ஆசனங்கள் செய்யலாம்.