உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்!
உலகில் 6.10 கோடி பேர் 'ஆட்டிசம்' பாதித்தவர்கள். 100ல் ஒரு குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகிறது என கூறப்படுகிறது.
ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. குழந்தையின் 10 - 18 மாதங்களில் இப்பாதிப்பை கண்டறிய முடியும்.
இப்பாதிப்பு உள்ளவர் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் திறன், சமூகத்தில் கலந்து பழகும் திறன் போன்றவற்றில் சிக்கல் கொண்டிருப்பர்.
ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஏப். 2ல் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் தலைப்பு, ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர் என்பதையும், அவர்களின் வேறுபாடுகள் வாழ்க்கையின் இயல்பான பகுதி என மக்களுக்கு உணர்த்துவது.
ஆட்டிசம் ஒரு நோய் அல்ல இது ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு. குழந்தையின் 10 முதல் 18 மாதங்களில் இப்பாதிப்பை கண்டறிய முடியும்.
ஆட்டிசம் உள்ள குழந்தைக்கு மூன்று வயதுக்கு முன்னரே மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சைகளை மேற்கொண்டால் அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகம்.