கருத்தரிப்பதற்கு முந்தைய ஆலோசனை அவசியமா?
குழந்தைப்பேறுக்கு திட்டமிடும் தம்பதியர், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாக தங்களது குடும்ப நல, மகப்பேறு நல டாக்டரை சந்தித்து 'கவுன்சிலிங்' பெற வேண்டும்.
உடல்நலம், வாழ்க்கை முறை, இருவரின் உடல்நலம் குறித்த முந்தைய மருத்துவ வரலாறு, அதற்காக உட்கொள்ளும் மருந்துகள் பற்றி டாக்டரிடம் தெரிவிக்க வேண்டும்.
இதன் மூலம் கர்ப்பகால சிக்கல்களை குறைத்து தாய், சேய் நலம் காக்க முடியும். கர்ப்பம் தரிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக ஆலோசனை பெறுவது அவசியம்.
'போலிக் அமில' மாத்திரையை உட்கொண்டால் சிசுவுக்கு நரம்புக்குழாய் குறைபாடு தடுக்கலாம் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு, இதயநோய், வலிப்பு நோய், மனநோய் இருந்தால் அதற்கான சிறப்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை பெற வேண்டும்.
சில மருந்துகளை மாற்ற வேண்டியிருக்கலாம் அல்லது சில மாத்திரைகளின் அளவை மாற்ற வேண்டியிருக்கும். அப்போது தான் பிரசவ காலத்தில் சிக்கலின்றி உடல்நிலை சீராக இருக்கும்.
முதல் பிரசவம் அறுவை சிகிச்சை மூலம் நடந்திருந்தால் அடுத்த குழந்தைப்பேறுக்கு இரண்டாண்டு இடைவெளி விட வேண்டும்.
கர்பக்காலத்தில் ஆரோக்கியமான உணவு, உறக்கம், உடற்பயிற்சியுடன் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும்.