சளித்தொல்லைக்கு வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்க !

பெரியளவிலான வெற்றிலை - 1, மிளகு - 2, கிராம்பு - 1 ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.

வெற்றிலையின் நுனி மற்றும் காம்புப் பகுதியை தவிர்க்க வேண்டும்.

பைட்டோ கெமிக்கல் பண்புகள் அதிகமுள்ளதால், எப்போது வெற்றிலையை உட்கொண்டாலும் நுனி, காம்புப்பகுதியை பயன்படுத்தக்கூடாது.

கிராம்பில் மொட்டு போன்ற தலைப்பகுதியை நீக்கி விட்டு, அடியிலுள்ள குச்சி போன்ற நீளமான பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

இதனுடன் சிறிது நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

அதிகளவில் சளித்தொல்லை, இருமல் இருந்தால் ஒரு நாளுக்கு 3 முறை இதுபோன்று சாப்பிட தீர்வு கிடைக்கும்.