சவாலாகும் குறைப்பிரசவ குழந்தைகளின் ஆரோக்கியம்

கர்ப்ப காலத்தில் சத்தாக சாப்பிட்டு, உடல் நலத்தை கவனித்தால் போதும் என்ற தவறான கணிப்பே பலரிடமும் உள்ளது.

ஆனால், திருமணத்திற்கு முன்பே ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, கர்ப்பமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது பெண்களில் பலருக்கும் சரிவர தெரிவதில்லை.

பொதுவாக குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்தால், ஒரு மணி நேரத்திற்குள் என்.ஐ.சி.யூ.,வில் சேர்க்க வேண்டும்.

ஆனால், என்னதான் பிரசவம் பார்த்த டாக்டர் போராடி புரிய வைத்தாலும், சம்மதம் பெற்று குழந்தையை என்.ஐ.சி.யூ., விற்கு மாற்ற 24 மணி நேரம் ஆகிறது.

இதனால் 50 %க்கும் குறைவான குழந்தைகளுக்கு மட்டுமே 'கோல்டன் ஹவர்' என்ற முதல் ஒரு மணி நேத்திற்குள் சிகிச்சை கிடைக்கிறது.

கவனம் செலுத்தி முறையான சிகிச்சை கிடைத்தால் மட்டுமே எதிர்கால தலைமுறையினரின் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

சில ஆண்டுகளில், நீரிழிவு, கேன்சர் போன்று குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு, அவர்களின் 40 வயதில் வரக் கூடிய உடல் கோளாறுகளின் தலைநகரமாக நம் நாடு மாற வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே, குறைப் பிரசவம் பற்றி பேசுவது, படிப்பது அபசகுணம் என நினைக்காமல், என்.ஐ.சி.யூ., பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்; சரியான நேரத்தில் இதில் குழந்தையை அனுமதிக்க வேண்டும்.