ஆர்வக்கோளாறில் ஜிம் சேர்ந்து பின் நின்றுவிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

சில மாதங்களுக்கு ஜிம் சென்றதும் உங்களது தசைகள் சற்று இறுகி வலுவாகும். திடீரென நீங்கள் ஜிம் பயிற்சியை கைவிட்டுவிட்டால் தசை வலி ஏற்படலாம். இறுக்கமான தசைகள் படிப்படியாக தளர்ந்து வலுவிழக்கும்.

ஜிம் பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது உங்கள் உடலில் இருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். பயிற்சியை திடீரென நிறுத்திவிட்டால் வியர்வை வெளியேற்றம் குறையும்.

நீங்கள் சாப்பிடும் கொழுப்பு உணவுகள் அடிவயிறு, தொடைத் தசைகளின் கீழ் கொழுப்பை சேகரிக்கும். இதனால் நாளடைவில் தொப்பை ஏற்படலாம்.

ஜிம் பயிற்சியில் ஈடுபடும்போது அதிகளவு எண்டோர்ஃபைன், செராடினான், டோபோமைன் ஹார்மோன்கள் சுரப்பதால், உங்களின் நாள் புத்துணர்ச்சியுடன் துவங்கும். திடீரென ஜிம் பயிற்சி நின்றால் மன மகிழ்ச்சி அளவு குறையும்.

அதிக வேலையின்றி இருந்த தசைகளுக்கு ஜிம்முக்கு செல்லும்போது வேலைபளு அதிகரிக்கும். சில மாதங்களில் பயிற்சியை நிறுத்திவிட்டால் மீண்டும் வேலை குறையும்போது, தசைகள் பாதிக்கப்படும்.

சிலருக்கு ஜிம் பயிற்சியை கைவிட்டால் உடல் எடை திடீரென அதிகரிக்கும். நடன கலைஞர்கள் சிலருக்கு இதுபோன்ற பிரச்னையால் நிரந்தரமாக உடல் பருமனடையும். ஹார்மோன் சுரப்பு அளவு மாறுபாடே இதற்கு காரணம்.