அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்து வேலை செய்வது கழுத்து வலியை உண்டாக்கும்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒருபக்க கழுத்து வலியால் அவதியுற்று வருவோர் சிலருக்கு தலையைத் திருப்பினால் மயக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படும்.

இதயத்தில் இருந்து கழுத்து வழியாக மூளைக்குச் செல்லும் ரத்த குழாய்கள் மூளைக்கு ரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை கொண்டு சேர்க்கும்.

தொடர்ந்து கணினி திரையைப் பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் தங்களை அறியாமல் கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்து பல மணிநேரமாக வேலை செய்யும்போது மூளைக்குச் செல்லும் ரத்த குழாய்கள் அழுத்தப்படும்.

இதனால் போதுமான அளவு ரத்தம் மூளைக்குச் செல்லாமல் ரத்தக் குழாயில் தேங்கும். பின்னங்கழுத்தில் உள்ள குழாய்கள் விரிவடையும். இதன்காரணமாக வலி ஏற்படும்.

மூளைக்கு போதுமான ரத்தம் செல்லாமல் இருந்தால், கழுத்தை திருப்பினால் மயக்கம் வருவது போன்ற உணர்வு அல்லது தலை சுற்றல் ஏற்படும்.

பணிக்கு இடையே அவ்வப்போது கழுத்தை அசைத்தல், எழுந்து உட்காருதல், கை, கால்களை நீட்டுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் ரத்தக் குழாயில் ரத்தம் சீராகப் பாயும்; மூளை சுறுசுறுப்படையும்.

அதேபோல கழுத்துக்கு அவ்வப்போது அசைவு கொடுப்பது எதிர்காலத்தில் வெர்டிகோ உள்ளிட்ட எலும்பு நோய்கள் வருவதைத் தவிர்க்கும்.