மங்குஸ்தான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்

பழங்களின் ராணி மங்குஸ்தான் மருத்துவ குணம் நிறைந்தது. சற்று மங்கலான நிறத்தில் இருக்கும். இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவை உடையது.

இதில், நார்ச்சத்து அதிகம். இதை அடிக்கடி சாப்பிட கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

அலர்ஜி தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. உடலை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மங்கலான நிறத்தில் இருந்தாலும் மங்குஸ்தானில் அரிய வகை சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதில், எலும்புகளை பலப்படுத்தக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மருத்துவ குணங்கள் உள்ளன.

நாள்பட்ட புண்கள், காயங்கள், காய்ச்சல், ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, உடல் மற்றும் மனச்சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவைகளை குணமாக்க, மங்குஸ்தான் பழம் உதவுகிறது.

இது உடல் சூட்டைத் தணித்து, தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

மங்குஸ்தான் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையக்கூடும்.

பழத்தை சுவைத்து சாப்பிட்டு அல்லது தோலை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து, சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் நீங்கும். வாய் மற்றும் வயிற்றுப்புண்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.