கர்ப்ப காலத்தில் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்...

கர்ப்ப காலத்தில் இயல்பை விடவும் மார்பகங்கள் பெரிதாகும். காரணம், தாய்ப்பால் சுரக்கத் தயார் நிலையில் ஹார்மோன் செயல்பாடுகள் இருக்கும்.

இந்த சமயத்தில், மார்பகங்களில் வலி, கனமான உணர்வு ஏற்படுவது இயல்பு.

வறட்சி ஏற்படு வதை தடுப்பதற்காக, இயற்கையாகவே மார்பக காம்பை சுற்றியுள்ள, 'ஏரியோலா' என்ற பகுதி பெரிதாகி, ஈரப்பசையுடன் மாறும்.

இந்த மாற்றங்களை பார்த்து கவலைப்பட தேவையில்லை. இதற்கு தகுந்த உள்ளாடை அணிவது அவசியம்.

அத்துடன் தோல் விரிவடைவதால் ஏற்படும் அழுத்தம், வெடிப்புகளை தவிர்க்க, வைட்டமின் - ஈ, ஹைட்ரலோனிக் அமிலம் உள்ள கிரீம்களை தடவலாம்.

வைட்டமின் - ஈஅதிகமுள்ள பாதாம், சியா, ஆளி விதைகள், கொலாஜன் நிறைந்த உணவுகளான முட்டை வெள்ளைக் கரு, ஆட்டு எலும்பின் உள்ளே உள்ள சதை போன்றவற்றை தினசரி சாப்பிடலாம்.

சைவ உணவில் கொலாஜன் அதிகம் கிடையாது. ஆனால் வைட்டமின் - ஈ அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டால், கொலாஜன் உற்பத்திக்கு உதவி செய்யும்.

முட்டை வெள்ளைக் கரு, ஆட்டு எலும்பின் உள்ளே உள்ள சதை போன்றவற்றை தினசரி சாப்பிடலாம்.

இவை, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுவதோடு, மார்பு பகுதியில் உள்ள தோல் விரி வடையும் போது, நெகிழ்வுத் தன்மைக்கு உதவும்.