ஆஸ்துமா, வீசிங் இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசம் அறிவோமா!
ஆஸ்துமா என்பது சுவாசக்குழாயை பாதிக்கும் ஒரு அலர்ஜி நோய். நுரையீரலில் ஏற்படும் பாதிப்பினால் ஆஸ்துமா ஏற்படுகிறது. இளைப்பு நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
மூச்சுத்திணறல் (வீசிங்) என்பது நுரையீரலில் உள்ள குறுகலான சுவாசக் குழாய்கள் வழியாக காற்று வெளியே செல்லும் போது ஏற்படும் ஒலி.
விசில் போன்ற இந்த சத்தம் நுரையீரலில் உள்ள குறுகலான சுவாசக் குழாய்கள் வழியாக காற்று நகரும்போது இது நிகழ்கிறது.
இது காற்றுப்பாதை பகுதியளவு எவ்வளவு தடைபட்டுள்ளது அல்லது குறுகிவிட்டது என்பதற்கான அறிகுறியாகும். இதற்கு ஆஸ்துமா ஒரு காரணம் தான் என்றாலும் வேறு காரணங்களாலும் வீசிங் வரலாம்.
நுரையீரல் தொற்று, புகைபிடித்தல், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், இதய செயலிழப்பு உள்ளிட்ட பல காரணங்களும் இதில் அடங்கும்.
ஆஸ்துமா தாக்குதல் ஏற்படும்போது, சளி உற்பத்தி அதிகரிப்பது, மூச்சுக்குழாய் மரத்தின் தசைகள் இறுக்கமடைவது போன்ற நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் வரும்.
ஆஸ்துமா, வீசிங் என எந்த பிரச்னை இருந்தாலும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், டாக்டரின் ஆலோசனையுடன் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.