செவித்திறன் குறைகிறதா? கவனமாக இருக்கணும்!

கூந்தல் நரைப்பது போல, முதுமையில் காதுகளின் செவித்திறன் குறையும். செவித்திறன் நரம்புகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாலும், ரத்த ஓட்டம் குறைவதாலும் இப்பாதிப்பு உண்டாகிறது.

தினசரி வாழ்வை பாதிக்கும்போது இவர்கள், 'ஆடியோமெட்ரி' பரிசோதனை செய்ய வேண்டும். தற்போது, டிஜிட்டல் கருவிகள் உள்ளதால், அனைவரையும் போல் இயல்பாக வாழ முடியும்.

பொதுவாக, 60 வயதுக்குமேல் செவித்திறன் குறைபாடு ஏற்படும். தற்போது அதிகரிக்கும் மொபைல் பயன்பாட்டால், 40 வயது முதலே இக்குறைபாடு உண்டாகிறது.

செவித்திறன் குறைவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாது. டி.வி., அதிக சத்தம் வைத்து கேட்பது, மொபைல் போனில் ஒரு முறைக்கு பல முறை என்னவென்று கேட்பார்கள்.

இந்த அறிகுறிகள் இருந்தால், உஷாராகிவிட வேண்டும். மேலும், காது ஜவ்வில் ஓட்டையாகி சீழ் வடிவது, காதுகளில் அடிக்கடி நீர் சென்று தொற்று ஏற்படுவது ஆகியவையும் அறிகுறிகள்.

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமான, தொடர்ச்சியான சத்தத்தில் இருந்து விலகியிருப்பது, மொபைலில் அதிக நேரம் பேசுவது ஆகியவற்றை தவிர்ப்பது சிறந்தது.

தொண்டையில் குரல் மாற்றம், அடிக்கடி தொண்டை கனைத்தல், உணவு விழுங்க சிரமம் இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.