நீரிழிவு பாதிப்பை தவிர்க்க இதோ சில டிரிக்ஸ்
எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய பழக வேண்டும்.
ஆண்களுக்கு வயிறு அல்லது தொப்பையின் சுற்றளவு 94 - 102 செ.மீ., மற்றும் பெண்களுக்கு 80 - 88 செ.மீ., இருக்க வேண்டும். இதற்கு மேல் அதிகரிக்க விடக்கூடாது.
வயிற்றின் சுற்றளவு அதிகரிக்கும் போது நீரிழிவு பாதிப்பு விரைவில் வர வாய்ப்புள்ளது. அதேப்போல், உயரத்துக்குகேற்ப உடலின் எடையை சீராக வைக்க வேண்டும்.
மன அழுத்தத்தினால் ரத்தத்தில் சில ஹார்மோன்களின் அளவு அதிகமாகி நீரிழிவு பாதிப்பை அதிகரிக்கும் என்பதால், மன பதட்டத்தை முடிந்தளவு குறைக்க வேண்டும்.
கொய்யாப்பழம், சாத்துக்குடி, மாதுளை, ஆப்பிள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
பாதிப்பை கட்டுக்குள் வைக்க புரதச்சத்து அவசியம் என்பதால், பால் மற்றும் அதன் பொருட்களை அடிக்கடி சேர்க்க வேண்டும்.
புகைப்பிடித்தல், குடிப்பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.
கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து கோழிக்கறி, முட்டையை சாப்பிடலாம்.