உணவில் புதினா இலைகளை அடிக்கடி சேர்க்க...!
புதினா இலைகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன.
இதிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடும்.
செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதால், எலுமிச்சை ஜூஸில் சிறிது புதின இலைகளை சேர்த்து குடிக்கும் போது புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.
புதினா இலைகளை மென்று சாப்பிடும்போது, வாய்க்கு புத்துணர்ச்சியளிப்பது மட்டுமின்றி, ஈறு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
புதினாவின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சரும பராமரிப்பை மேம்படுத்த உதவுகிறது.
வயிற்றுவலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், உட்பட வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாக உள்ளது.
எனவே, சட்னி முதல் தேநீர் வரை, புதினா இலைகளை அவ்வப்போது உணவில் பயன்படுத்தலாம்.