நம்மிடமே இருக்கு மருந்து - பிளம்ஸ்!
மலைகளில் விளையும் பிளம்ஸ் பழம், 'கொத்துப்பேரி' என்றும் அழைக்கப்படுகிறது.
இதிலுள்ள அதிகப்படியான வைட்டமின் 'சி' தான், இதன் புளிப்பு சுவைக்கு காரணம்.
புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணம், பிளம்சில் இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
ரத்தத்தை சுத்திகரித்து, நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது.
பிளம்சில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள், சரும தோற்றத்தை காத்து, புத்துணர்ச்சி பெற வைக்கிறது.
ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் பெண்கள், பிளம்ஸ் பழத்தை சாப்பிடலாம்.
டைப் 2 நீரிழிவு நோய் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது.
பொட்டாசியத்தின் வளமான மூலமாக திகழ்கிறது, பிளம்ஸ். பொட்டாசியம் தான் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.