கருப்பு உதடுகள் ரத்த சோகையின் அறிகுறியா?
உதடுகள் கருப்பாக இருப்பது ரத்த சோகையின் முக்கிய அறிகுறி என மருத்துவர்கள் கூறுகின்றனர். தவிர, உடல் பருமன், ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கிறதா என்பதையும் பரிசோதிக்க வேண்டியது முக்கியம்.
உதடுகளை தவிர, உடலின் மற்ற இடங்களில் தோலின் நிறம் அடர்த்தியாக இருப்பது, ஹார்மோன் சீரற்ற தன்மையால் இருக்கலாம்.
அதற்கு ஹார்மோன் பரிசோதனை செய்து, இதற்காக சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.
வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் கருப்பான உதடுகளுக்கு கெமிக்கல் பீல்ஸ், லேசர் சிகிச்சைகள் உள்ளன. ஆரம்பத்திலேயே தகுந்த சிகிச்சை செய்தால் சுலபமாக சரி செய்யலாம்.
ரசாயன பொருட்கள் கலந்த அடர்த்தியான நிறங்களில் உள்ள லிப்ஸ்டிக்குகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். காரணம், இவை எளிதாக உதடுகளில் பிரச்னையை ஏற்படுத்தும்.
லிப்ஸ்டிக், லிப் பாம் தடவியதும் எரிச்சல், அரிப்பு, உதடுகளில் வெடிப்பு, உதடுகள் வெள்ளை நிறமாக மாறுவது தெரிந்தால், உடனடியாக டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
தோலின் தன்மைக்கு ஏற்ற மாய்சரைசரை டாக்டரின் அறிவுரைப்படி பயன்படுத்துவதை போன்று உதடுகளுக்கும் உபயோகிக்க வேண்டும்.
பழச்சாறு, இளநீர் அதிகம் குடித்து, நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.