கோடை காலத்தில் தூங்க விடாமல் முதுகு, மற்றும் உடலில் காணப்படும் வியர்க்குரு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடும்.

கோடையில் அதிகம் கிடைக்கும் வெள்ளரி, இளநீர், தர்ப்பூசணி, முலாம் பழம் போன்றவற்றை தினமும் எடுத்துக்கொள்ளலாம்.

மஞ்சள், சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்க வேண்டும். அவற்றைதணியாகவும் தேய்த்து குளிக்கலாம். கிருமிகள் அண்டாமல் பார்த்துக்கொள்ளும்.

குப்பைமேனிக் கீரையை பருப்பில் சேர்த்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து வியர்க்குருவை விரட்டும்.

வேப்பிலையுடன், மஞ்சள் மற்றும் சந்தனபொடி சேர்த்து அரைத்து உடலில் பூசி குளிக்க வேண்டும். இதனால், அம்மை போன்ற பாதிப்புகள் கூட ஏற்படாமல் இருக்கும்.

வெட்டிவேரை சுத்தமான நீரில் சில மணி நேரம் ஊறவைத்து உடலில் மெதுவாக தேய்த்து குளிக்கலாம். படிப்படியாக வியர்க்குரு குறையும்.

திரிபலா பொடியுடன் பச்சைபயிறு மாவை சேர்த்து குளிப்பதால் வியர்க்குரு விரைவில் மறையும்.

நுங்கை அடிக்கடி எடுத்து கொள்வதன் மூலம் உடல் சூடு தணிந்து, வியர்க்குரு நீங்கும்.