இதயத்தை போல மூளை அடைப்புக்கும் ஸ்டென்ட் வைக்கலாமா?
ரத்தக்குழாய்களில் அடைப்புகள் நிகழ்ந்து சரியான அளவில் ரத்தம் இதயத்திற்கோ மூளைக்கோ செல்லாமல் இருந்தால் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த தாராளமாக 'ஸ்டென்ட்' வைக்கலாம்.
அதற்கு முன் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் எந்த அளவு அடைப்பு உள்ளது என்பதை கண்டறிவது அவசியம்.
இதற்கு, மூளைக்கான ஆஞ்சியோ டெஸ்ட் சி.டி.ஸ்கேன் மூலமாகவோ, டி.எஸ்.ஏ., ஸ்கேன் மூலமாகவோ கண்டறிய வேண்டும்.
அதன் பின் ஸ்டென்ட் வைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 70 சதவீத அடைப்பு நிகழ்ந்திருக்க வேண்டும்.
இந்த அடைப்பினால் 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு நிகழ்வு நடந்திருக்க வேண்டும்.
இதன் பிறகே 'ஸ்டென்ட்' வைப்பது உபயோகமாக இருக்கும் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.