பனிக்கால அலர்ஜி: கை வைத்தியத்தில் இருக்கு 'சீக்ரெட்'
பனிக்காலம் துவங்கிவிட்டது. நம் உடல் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம். இந்த பனிக்காலத்தில் சிலருக்கு அலர்ஜி, சாதாரண அறிகுறி போல் தோன்றி பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும்.
குளிர்கால அலர்ஜியின் அறிகுறிகளாக மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, கண்ணிலிருந்து நீர் வழிவது, தும்மல், தலைவலி, தொண்டை வலி, சோர்வு ஆகியவை உண்டாகும். இவற்றை தவிர்க்க சில டிப்ஸ்...
குளிர் காலத்தில் காலை நேரங்களில் முடிந்தளவு வீட்டின் கதவு, ஜன்னல்களை மூடி வைப்பது நல்லது. பனிக்காலத்தில் மகரந்த சேர்க்கையின் பரவல் அதிகமிருப்பதால் தொற்றுகள் எளிதாக பரவும்.
வெங்காயத்தில் ஒவ்வாமையை விரட்ட கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமுள்ளது. தினமும் ஒருசில வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் அலர்ஜியிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
தேநீரில் ஏலக்காய், லவங்கம், அதிமதுரம் ஆகியவற்றை கலந்து குடித்தால், சளி கட்டுக்குள் இருப்பதுடன், உடல் வெப்பநிலையை சீராக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
ஆமணக்கு எண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்திகிறது. எனவே, இந்த எண்ணெயை அடிவயிற்றில் தடவி வர, பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகளை தடுக்கும்.
தினமும் சிறிதளவு தேன் மற்றும் இஞ்சிச் சாற்றை கலந்து குடித்து வந்தால், குளிர்கால தொற்றுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.\