கர்ப்பப்பை தொடர்பான பிரச்னையும் வாழ்க்கை முறை மாற்றமும்!

கர்ப்பப்பை தொடர்பான பிரச்னை இன்று பெண்களுக்கு பெரிய அளவில் இருக்கிறது. இது, 13 - 45 வயது வரை உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது.

இதற்கு மிக முக்கிய காரணம், வாழ்க்கை முறை மாற்றம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, நாம் சாப்பிடும் உணவுகளில் பாரம்பரியமான உணவுகளை தவிர்த்து, கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவுகளே இன்று பிரதானமாக உள்ளது.

அதிலும், 10 ஆண்டுகளாக இந்தப் பழக்கம் அதிகமாகி வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் உடலுழைப்பும் கிடையாது.

உடலில் கொழுப்பு அதிகம் சேரும் போது, அது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாக சுரப்பதற்கு துாண்டும்.

இந்த ஹார்மோன் சுரப்பு சீராக இருந்தால் மட்டுமே, கரு முட்டை வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்; எந்தப் பிரச்னையும் இல்லாமல் மாதவிடாய் வரும்.

மேலும் உணவுகள் வழியே பிளாஸ்டிக், கெமிக்கல்கள் உடலில் சேரும் போது, ஜீனோ ஈஸ்ட்ரோஜென்னாக மாறி உடலில் சேர்கிறது.

இதுவும் கர்ப்பப்பையின் உள்ளடுக்கான எண்டோமெட்ரியத்தில், அதிகப்படியான வளர்ச்சிக்கு வழி செய்கிறது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.