கர்ப்ப காலத்தில் ஏற்படும் மூட் ஸ்வின்ஸ் .. எப்படி கையாளலாம்?

பெண்களின் கர்ப்ப காலத்தில் மூட் ஸ்வின்ஸ் என பரவலாக கூறப்படும் மனநிலை மாற்றங்கள் என்பது மிகவும் பொதுவான பிரச்னை தான்.

அந்த சமயத்தில் ஹார்மோன் மாற்றத்தால் அதிக மகிழ்ச்சி, உற்சாகம், சோகம், சோர்வு என மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.

குறிப்பாக ஒவ்வொரு மாதமும் உடல் மாற்றம் அடைய அடைய உணர்ச்சிகளிலும் மாற்றம் ஏற்படும்.

நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை பற்றி உங்கள் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் பேசுங்கள். மேலும் தோழியிடம் அவர்களின் அனுபங்களை பகிர்வது மனஅமைதியை தரும்.

மருத்துவர்கள் பரிசிலிக்கும் மாத்திரைகளுடன், ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலும், மனமும் சுறுசுறுப்பாக மாறும்.

ஓய்வு எடுப்பது நல்ல மாற்றத்தை தரும். குழப்பத்தை குறைக்கும். பகல்நேரத்திலும் அடிக்கடி சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுப்பது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உற்சாகமாக இருக்க உதவும்.

உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்துகிறது. நடைப்பயிற்சி, யோகா மற்றும் தியானம் போன்றவையும் பெரிதும் உதவும்.

திரைப்படங்கள், மால், கோவில் போவது என கொஞ்ச நேரம் பிடித்தவற்றில் செலவிடுதல் மனதை சாந்தப்படுத்தும். கணவருடன் ஒருநாள் சுற்றுலா செல்லலாம். இட மாறுதலும் உற்சாகத்தை அளிக்கும். மனதிற்கும் மாறுதலாக இருக்கும்.

தோட்டக்கலையில் ஈடுபடலாம். சுத்தமான காற்றை சுவாசித்தல் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.