சின்னம்மை பரவல்… உஷார் மக்களே!

சின்னம்மை வருவதற்கு காரணம் வெரிசெல்லா ஸோஸ்டர் என்கிற வைரஸ்தான். காற்று மூலமாக, ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இது விரைவில் பரவும்.

கோடைக்காலத்தில் இதன் பரவல் அதிகமாகும். சிறியவர்களும் பெரியவர்களுக்கும் வரும். சுமார் 5 முதல் 10 நாட்கள் வரை உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இருமல், சளி, தும்மல் வழியாக இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம். அம்மை புண்களை இன்னொருவர் தொடுவதால் கூட தொற்று ஏற்படலாம்.

சின்னம்மையைப் பொறுத்தவரை பெரும்பாலும் சிகிச்சை தேவைப்படாது. ஓய்வே போதுமானது.

பாதிக்கப்பட்டவர்கள் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவு கட்டுப்பாடு பாதிக்கப்பட்டவர்களுக்கு இல்லை. இருந்தாலும் வீட்டில் சுத்தமாகச் சமைக்கவும். காரம் மற்றும் எண்ணெய் குறைவாக இருக்க வேண்டும்.

மோர், பழச்சாறுகள், இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை அதிகம் எடுக்கவும். நுங்கும் மிகவும் குளிர்ச்சி தரும், அதனால் அதையும் கொடுக்கலாம்.

கேரட், மஞ்சள் பூசணி, பப்பாளி போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் கொடுக்க வேண்டும்.