ஆர்த்தரைட்டிஸ் பாதிப்பில் இருந்து காக்கும் ஓமம்!

ஓமம் விதைகளில் கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதங்கள், ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளன. தாமிரம் , அயோடின், மாங்கனீசு, தியாமி போன்ற பண்புகளும் நிறைந்துள்ளன.

இதில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் ஆர்த்தரைட்டிஸ் பாதிப்பில் இருந்து காக்க உதவுகிறது. மூட்டு வலி உள்ள இடத்தில், ஓமம் விதை பேஸ்ட்டை போல் தடவி பின் கழுவலாம்.

குழந்தைகள் இருக்கும் வீட்டில் கட்டாயம் ஓமம் இருக்க வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு ஓம நீர் நல்ல நிவாரணம் தரும்.

ஓமம் நீரானது குடல் நொதிகளை தூண்டி செரிமானத்தை துரிதப்படுத்தும். வயிற்று வலி, வாயு விலகல், அஜீரணம் உள்ளிட்ட நாள்பட்ட வயிற்றுப் பிரச்னைகளை சரியாக்கும்.

உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓமம் உதவுவும். இது விரைவில் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவும்.

இது நுரையீரலை சுத்தப்படுத்தி, தொண்டை, குரல்வளையை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. ஓமம் விதைகளை, வெல்லம் சேர்த்து மென்று வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலிகளை குறைக்க உதவும். பெண்களின் கருப்பை மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்னைகளை நீக்கும்.

ஓமம் விதைகள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால், பல்வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.