குருமிளகின் ஆரோக்கிய நன்மைகள் சில
இதில், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், தையமின், ரிபோபிளேவின் மற்றும் நியாசின் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
கருப்பு மிளகிலுள்ள பைபெரின் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது; நரம்பியக்கடத்தல் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. தினமும் மிளகு ரசம் சாப்பிட, வயிற்று உபாதைகள், சுவாச நோய்கள் வராமலிருக்கும்.
புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கவும் மிளகு உதவுகிறது. இதிலுள்ள செலினியம், குர்குமின், பீட்டா கரோட்டின், வைட்டமின் 'பி' போன்றவை, குடல் பகுதிகளிலுள்ள அசுத்தங்களை நீக்குகிறது.
நெஞ்சுச்சளி, நுரையீரல், செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கிறது. சுவாசக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சைனஸ், மூக்கடைப்பு பிரச்னைகளுக்கு தீர்வாகிறது.
இது ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதுடன், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
மிளகை கடித்துச் சாப்பிட்டால் பல் ஈறுகளுக்கு பலம் கிடைக்கும். மிளகுடன் உப்புச் சேர்த்து பல் துலக்கினால், பல் வலி, சொத்தை பல், ஈறு வலி, ஈறுகளிலிருந்து ரத்தம் வடிதலுக்கு நிவாரணம் கிடைக்கும்.