தினசரி தேங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை பலன்களா?
உடலுக்கு பலவித நன்மைகளை அள்ளித்தரும் உணவு தேங்காய். இளநீர், பச்சைத் தேங்காய், தேங்காய் எண்ணெய் என பல வகைகளில் தேங்காய் மனிதர்களுக்குப் பயன்படுகிறது.
தைராய்டு ஹார்மோன் சுரப்பு சீராக, உடல் எடையை குறைக்க, இதய நோய் மற்றும் அல்சைமர் நோய்களை குணப்படுத்த தேங்காய் எண்ணெய் உதவும். இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தீர்க்கும்.
சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட பல மருத்துவ முறைகளில் தேங்காய் எண்ணெய் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
தினசரி சமையலில் தேங்காய் சேர்த்துக்கொண்டால், இதய நோய்களைத் தவிர்க்கலாம். தேங்காய் சாப்பிடுவது மனச்சோர்வையும் விரட்டும்.
உலர்ந்த தேங்காயை உட்கொள்வது பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனுடன், குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
சமையலில் சேர்க்கப்படும் தேங்காய், நாம் உட்கொள்ளும் மசாலா உணவுகளின் நச்சுத்தன்மையைக் குறைக்க உதவும். இதனால் உடல் டீடாக்ஸ் செய்யப்பட்டு கல்லீரல் பாதுகாக்கப்படும்.
தேங்காய் உட்கொள்வதன்மூலம் சிறுநீர் தொற்று தவிர்க்கப்படும். சிறுநீர்ப் பாதையில் கெட்ட பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கிறது.