உயிர்களைக் காப்பாற்றும் ரத்த தானம்… யாரெல்லாம் செய்யலாம்?

18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைத்து ஆண்களும், பெண்களும் ரத்த தானம் செய்யலாம்.

ஆண்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும், பெண்கள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறையும் தானம் செய்யலாம். ஒரு நபர் ஆண்டுக்கு 4 முறை ரத்த தானம் செய்யலாம்.

தானம் செய்பவரின் எடை 45 கிலோவுக்கு குறைவாக இருக்கக்கூடாது.

ஹீமோகுளோபின் ஒரு டெசிலிட்டருக்கு 12.5 கிராமுக்கு குறைவாக இருக்கக்கூடாது.

நம் ஒவ்வொருவருடைய உடலிலும் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் ரத்த தானத்தின் போது எடுக்கப்படும் ரத்தம் 350 மில்லி லிட்டர் மட்டுமே.

அரசு ரத்த வங்கிகள் மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் ரத்த வங்கிகளில் மட்டுமே ரத்த தானம் செய்ய வேண்டும். அனுமதி பெற்ற தனியார் ரத்த வங்கிகள் நடத்தும் முகாம்களிலும் ரத்த தானம் செய்யலாம்.

ரத்தம் ஒரு வாரத்துக்குள்ளோ, 10 நாளைக்குள்ளோ ஊறி விடும். ரத்த தானம் செய்த அன்றே உணவு சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்லலாம். ஆனால் அன்று கடினமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது.

ரத்தத்தில் 40 சதவீதம் பிளாஸ்மா இருக்கும். மேலும் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் ஆகியவையும் ரத்தத்தில் இருந்து பிரிக்கப்படும். அவையும் தேவைப்படுபவர்களுக்கு அளிக்கப்படும்.

சமீபத்திய உங்களது பயண வரலாறு, ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி அல்லது சி போன்ற சுகாதார பிரச்னைகளை பொறுத்து நீங்கள் இரத்த தானம் செய்ய தகுதியுடையவரா? இல்லையா? என்பது முடிவு செய்யப்படும்.