இதயம் காக்கும் இலை காய்கறிகள்

இலைகளை உடைய காய்கறிகளை உண்பது இதய நோய்களைக் குறைக்கும் என்கிறது சமீபத்திய ஆய்வு.

கீரை, பிராக்கோலி, முட்டைக்கோஸ் முதலிய காய்கறிகளில் வைட்டமின் கே1 நிறைந்துள்ளது. இது இதயம், ரத்த நாளங்களை வலுப்படுத்தும்.

ஆஸ்திரேலியாவிலுள்ள இசியு பல்கலையும், டேனிஷ் புற்றுநோய் மையமும் இணைந்து இது தொடர்பாக 14 ஆண்டுகள் ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், தினமும் தங்கள் உணவில் எவ்வளவு 'கே 1' வைட்டமின் எடுத்துக் கொள்கின்றனர் என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

கே1 அதிகமாக உண்டவர்களின் ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஆண்கள் தினமும் 120 மில்லி கிராமும், பெண்கள் 90 மில்லி கிராமும் கே1 வைட்டமின் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கே1 வைட்டமின் ஒரு கப் கீரையில் 145 மில்லி கிராமும், அரை கப் பிராக்கோலியில் 110 மில்லி கிராமும், அரை கப் முட்டைக்கோஸில் 82 மில்லி கிராமும் உள்ளது.

எனவே தினமும் இவற்றை உண்டாலே உடலுக்குத் தேவையான கே 1சத்து கிடைத்துவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.