மூளையை தின்னும் அமீபா பரவல்: சபரிமலை பக்தர்கள் உஷார்
சபரிமலையில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை காலம் நாளை துவங்குகிறது. இதற்காக இன்று மாலை 5:00 மணிக்கு அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.
இந்நிலையில், கேரளாவில் சில இடங்களில், 'அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்' என்ற நோய் பரவி வருகிறது.
இது, மூளையை தின்னும் அமீபா என அழைக்கப்படுகிறது. அதனால், கேரள சுகாதாரத்துறை, சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்களுக்காக சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
சபரிமலை வரும் வழியில், ஆறுகளில் குளிக்கும் போது, மூக்குக்குள் நீர் செல்லாமல் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும்
ஏற்கனவே உள்ள பிரச்னைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், அவற்றை தொடர்ந்து சாப்பிட வேண்டும்
மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், அதற்கான ஆவணங்கள் மற்றும் மருந்துகளுடன் பயணிப்பது அவசியம்
சபரிமலை யாத்திரை புறப்படும் முன், நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
மலை ஏறும் போது மெதுவாகவும், இடைவெளி விட்டும் ஏற வேண்டும்
கொதிக்க வைத்த நீரையே குடிக்க வேண்டும். உணவு சாப்பிடும் முன் கைகளை கழுவ வேண்டும்.
மேலும், அவசர மருத்துவ உதவிக்கு 04735 203232 என்ற எண்ணை தொடர்பு கொள்ள, அய்யப்ப பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.