தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டியது புற்றுநோய் பாதிப்பு
தமிழகத்தில், கடந்த ஓராண்டில் மட்டும் புற்றுநோய் கண்டறியப்பட்டவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் அரியலுார், பெரம்பலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்களில், அதிகளவில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
புற்றுநோய் பரவலில், முதல் இடத்தில் கேரளா மாநிலம் உள்ளது. அங்கு ஒரு லட்சம் பேரில், 173 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
மாவட்ட அளவில் பொறுத்த வரை, சென்னையில் 8,505 பேரும்காஞ்சிபரத்தில் 7,295 பேரும்வேலூரில், 6,525 பேரும் புற்றுநோயால் பாதிப்படைந்துள்ளனர்.
உணவு முறை மாற்றம், பழக்கவழக்கம் போன்றவற்றால், புற்று நோயாளிகள் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 2012ம் ஆண்டு, 53,022 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 2025ம் ஆண்டில், ஒரு லட்சத்து 97 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது .
அதில், 46,555 ஆண்கள், 53,542 பெண்கள். அதாவது ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2020ல் 68,750 பேரும்2021ல் 76,968 பேரும்2022ல் 89,265 பேரும்2023ல் 92,816 பேரும் 2024ல் 96,486 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.