கருமையான உதடுகளை இயற்கையாக மிளிரச் செய்யலாம்...!

எலுமிச்சை சாற்றை பருத்தி துணியால் நனைத்து உதடுகளில் தடவி, சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் கருமை நீங்கும்.

தேன் மற்றும் பாதாம் எண்ணெயை சம அளவில் கலந்து, தூங்குவதற்கு முன்பு உதடுகளில் தடவினால் கருமைநிறம் நீங்கும்.

பீட்ரூட் சாற்றைப் பருத்தி துணியில் நனைத்து உதட்டில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுவினால் கருமை நீங்கும்.

சிறிதளவு சுத்தமான கற்றாழை ஜெல்லை உங்கள் உதடுகளில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவினால் கருமை நீங்குவதோடு, உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

கருமையான உதடுகள் சில நேரங்களில் நீரிழப்பு காரணமாக இருக்கலாம். உங்கள் உதடுகள் உட்பட உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பது அவசியமாகும்.

சூரிய ஒளி உங்கள் உதடுகளை மேலும் கருமையாக்கும். உதடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் UV கதிர்களிலிருந்து பாதுகாக்க தொப்பி அல்லது தாவணி போன்றவற்றை வெளியில் செல்லும் போது முகத்தில் அணிவது அவசியம்.