நீரிழிவை கட்டுக்குள் வைக்கும் பிஸ்தா !
இதில் வைட்டமின்கள், மினரல்கள் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வைட்டமின் பி6 உள்ளதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகரிக்கும். உடல் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கும்.
வைட்டமின் பி6, நோய் எதிர்ப்புத்திறனை தருவதோடு, வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதிலுள்ள வைட்டமின் ஈ தோல் முதிர்ச்சியடைவதை தடுத்து, அழகான தோலினை தருகிறது. புற ஊதாக்கதிர்களால் தோல் பாதிக்கப்படாமலும், தோல் புற்றுநோய் வராமலிருக்கவும் உதவும்.
இதிலுள்ள சியாசாந்தின் மற்றும் லூட்டின் என்ற 2 கரோட்டினாய்டுகள் கண்ணின் விழித்திரை பாதிக்காமல் பாதுகாத்து தெளிவான பார்வைக்கு உதவுகின்றன.
பிஸ்தா சாப்பிடுவதால் உடலிலுள்ள கெட்ட எல்டிஎல் கொழுப்பை குறைப்பதோடு, ஆரோக்கியம் தரக்கூடிய ஹெச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கச்செய்யும். இதயநோயால் ஏற்படும் பாதிப்பையும் குறைக்கும்.
பிஸ்தாவை தொடர்ந்து சாப்பிட டைப் 2 நீரிழிவு பாதிப்பை தவிர்க்க உதவும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வைக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
இதில், அதிகளவிலுள்ள பாஸ்பரஸ், குளுக்கோசை அமினோ அமிலமாக சிதைப்பதால், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஸ்தா பயனுள்ள ஒன்றாகும்.
தினமும் பிஸ்தா சாப்பிட்டு வர எந்த வகையான புற்று நோயும் வராமல் தடுக்கலாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் அறிவித்துள்ளது.
ரொட்டியுடன் கையளவு பிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கணிசமாக குறையும். மேலும், பசியைத் தூண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.