சருமத்தில் வழியும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும் தக்காளி
தக்காளியை இரண்டாக வெட்டி முகம் முழுவதும் மசாஜ் செய்து, ஐந்து நிமிடம் கழித்து முகத்தை அலசினால், எண்ணெய் பசை கட்டுக்குள் வரும்.
முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை அகற்றத் தக்காளியைக் சருமத்தில் மசாஜ் செய்து, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை அலசினால், நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.
தக்காளி சாற்றுடன், சிறிதளவு மோர் கலந்து பசையாகத் தயார் செய்து முகத்தில் அப்ளை செய்து வந்தால், சூரிய ஒளியிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து, மென்மையாக மாற்றும்.
கோடையில் அடிக்கடி வெளியே செல்வதால், சருமத்தின் நிறம் மாறக்கூடும். இதைத் தடுக்க தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை சேர்த்து அரைத்து, வெயிலில் சென்று வந்தவுடனேயே சருமத்தில் தடவலாம்.
தக்காளியில் வைட்டமின் சி, ஏ மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளதால், சருமத்தைப் பொலிவாகவும் வைக்க உதவுகிறது.