தாய்ப்பால் தானம் வழங்குவதால்...!

எடை குறைவான குழந்தைகளின் குடல் வளர்ச்சி முழுமையாக இருக்காது.

தாய்ப்பாலை மட்டுமே இக்குழந்தைகளால் செரிக்க இயலும். மாற்றுப்பால் கொடுத்தால் வயிறு நீக்கம் ஏற்படும்.

சில நேரங்களில் குடலுக்கான ரத்த ஓட்டம் குறைந்து அழுகி விடுவதற்கும் வாய்ப்புள்ளது. இவர்களுக்கான முதல் சிகிச்சையே தாய்ப்பால் தான்.

எனவே, சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், மஞ்சள் காமாலை இல்லாத, தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற பெண்களும் தானம் செய்யலாம்.

வீட்டிலேயே தாய்ப்பாலை எவர்சில்வர் பாத்திரத்தில் சேகரித்து தாய்ப்பால் வங்கியில் நேரடியாக கொடுக்கலாம்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களின் குழந்தைக்கான பாலை இம்முறையில் சேகரித்து அறை வெப்பநிலையில் 4 மணி நேரம் அல்லது பிரிட்ஜில் 8 மணி நேரம் வைத்திருந்து குழந்தைகளுக்கு தரலாம்.

தாயை இழந்த மற்றும் தாய்ப்பால் சுரக்காத பெண்களுடைய குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், அரசு மருத்துவமனைகளில் தாய்பால் வங்கி செயல்படுவது குறிப்பிடத்தக்கது.