வைட்டமின் டி சத்து நிறைந்துள்ள பழங்கள் !

ஆரஞ்சு பழங்களில் அதிகளவில் வைட்டமின் சி நிறைந்திருந்தாலும், அவை வைட்டமின் டி சத்துக்களையும் வழங்குகின்றன.

மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தில், வைட்டமின் டி சத்துக்களும் நிறைந்துள்ளன. இது உடலின் வைட்டமின் டி உற்பத்தியைத் தூண்டுவதால் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

அத்திப்பழத்தில் வைட்டமின்கள் டி, சி, ஏ மற்றும், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உலர் பழமாக அதிகளவில் உட்கொள்ளப்படுகிறது.

வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த பப்பாளியில், சிறிதளவு வைட்டமின் டி உள்ளது. ஆரோக்கியமான சிற்றுண்டி அல்லது பழ சாலட்களுக்கு இது சிறந்த சாய்ஸ்.

அவகேடோ சுவையானது மட்டுமின்றி, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இதில், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து வைட்டமின் டி உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

வைட்டமின் சி உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள கொய்யாவில், சிறிதளவு வைட்டமின் டி சத்தும் உள்ளதால், அடிக்கடி இதை உட்கொள்ளலாம்.

நார்ச்சத்து நிறைந்த கிவி பழத்தில் வைட்டமின் டி உள்ளது குறிப்பிடத்தக்கது.