முதுமையை எளிமையாக்க ஹெல்தி ஏஜிங் அவசியம்!!

முதுமை என்பது நம் அனைவருக்கும் இயற்கையாக இயல்பாக நடக்கும் விஷயம்; யாராலும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது.

அதே நேரத்தில், வயதானாலும் ஆரோக்கியமாக, தரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

கடைசி வாழ்நாள் வரை நம் வேலைகளை நாமே செய்து, இயல்பாக இருப்பதற்கு பெயர் தான் 'ஹெல்தி ஏஜிங்!'

டிமென்ஷியா வந்தால் குறிப்பிட்ட நிலைக்கு மேல் எந்த சிகிச்சையும் கிடையாது. வருமுன் காப்பது தான் சிறந்தது. இதற்கு யோகா, ஆர்ட் தெரபி உட்பட பல்வேறு தெரபிகள் உள்ளன.

மன அழுத்தமும், சர்க்கரை கோளாறும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. நீரிழிவு, மன அழுத்தம், மனப் பதற்றம் இருப்பது தெரிந்தால், அதற்கு தகுந்த மருத்துவரின் ஆலோசனை பெறவும்.

நம் நாட்டில் குறிப்பாக பெண்களுக்கு இருக்கும் பிரச்னை 'பொதுவான உடல் பலவீனம்' என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தசைகள், எலும்பு, நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருந்தால், எந்த நோய் வந்தாலும், அதை எதிர்கொள்ளும் திறன் நன்றாக இருக்கும்.

சரியான அளவில் புரதச்சத்து, உடற்பயிற்சி இருந்தால், உடல் பிரச்னைகளை சுலபமாக சமாளிக்கலாம்.