முளைவிட்ட உருளைக்கிழங்கை சமையலுக்கு பயன்படுத்தலாமா?
உருளைக்கிழங்குகளை வெளிச்சத்தில் வைக்கும் போது, அது முளைவிடுதலை தூண்டுகிறது.
இதில், க்ளைகோலாய்டு, சொலானின் போன்ற நஞ்சுத்தன்மைகள் இருக்கக்கூடும்.
இதனால்,
வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்று வலி ஏற்படக்கூடும்.
தலைசுற்றல், மயக்கம், குழப்பம், பார்வை திறனில் பிரச்னை, சுய நினைவை
இழத்தல் போன்றவைக்கும் வாய்ப்புள்ளது.
எனவே, குருத்துகள் மிக சிறிதாக இருந்தால், சமைப்பதற்கு முன்பு அவற்றை நீக்கிவிடலாம். ஒரு இன்ச்க்கு மேல் வளர்ந்திருந்தாலோ அல்லது மிருதுவாக இருந்தாலோ சமைக்கக்கூடாது.
உருளைக்கிழங்கில் பச்சை நிறம் தெரிந்தால், அதனை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது. இதுவும் நச்சுத்தன்மை இருப்பதன் அறிகுறியாகும்.
முளைவிட்ட
உருளைக்கிழங்குகள், தொட்டுப் பார்க்க திடமாக, சுருக்கங்கள் ஏதுமின்றி
இருந்தாலோ, குருத்துகள் மிகவும் சிறிதாக இருந்தாலோ , அவற்றை உணவில்
சேர்க்கலாம்.
ஆனால், தொடுவதற்கு மிகவும் மிருதுவாகவும்,
சுருக்கங்களுடனும் காணப்பட்டால் அதிலுள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தையும் அவை
இழந்திருக்கும் என்பதால் உட்கொள்ளக்கூடாது.
கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.