அலுமினியம் ஃபாயிலில் உணவு பேக் செய்வதால் உண்டாகும் ஆபத்துகள்
உணவகங்கள் துவங்கி வீடுகள் வரை தற்போது அலுமினியம்
ஃபாயில்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகளுக்கு இதில் உணவை
பேக் செய்து கொடுப்பதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
இதிலுள்ள
நச்சுப்பொருட்கள் அவர்களது வளரும் பருவத்தில் உடலுக்குத் தேவையான ஜிங்,
மக்னீசியம், மாங்கனீஸ் உள்ளிட்ட தாதுக்களின் தரத்தை குறைக்கும்.
அலுமினியம் பாயில் கோட் செய்த முந்திரி கேக், பால் இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும்.
வாழை இலையில் பேக் செய்யப்பட்ட தந்தூரி சிக்கனை வாங்குவது நல்லது. சிக்கனின் அதீத சூடு காரணமாக பாயில் உருகி உணவில் கலக்கும்.
அலுமினியம் சிறிது சிறிதாக உடலில் சேரும்போது நாளடைவில் தாதுக்களின் சுரப்பு குறைந்து ஆண்மை ஹார்மோனான டெஸ்டாஸ்டிரான் உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஆண்மை குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
நீரிழிவு, இதய பாதிப்பு, பிற நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை
பெறுவோர் அலுமினியம் ஃபாயில் உணவுகளை தவிர்க்காவிடில், ரத்த கொதிப்பு
அதிகரித்து பிற நோய்கள் எளிதில் உடலை பாதிக்கும்.