எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் சீபம் அதிகரித்து முகப்பருக்கள் அதிகளவில் தோன்றும்.
தினந்தோறும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கும் போது கழிவுகள் அகற்றப்பட்டு முகப்பரு வராமல் தடுக்கலாம்.
பாலால் ஆன பொருட்களை அதிகளவில் உட்கொண்டால் முகப்பருக்கள் உருவாக அதிகம் வாய்ப்புள்ளது.
தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாவதுடன், முகம் பொலிவாக இருக்கும்.
நகம், விரல்களில் பாக்டீரியா மற்றும் கிருமிகள் இருக்கும். அதோடு முகப்பருவைத் தொடும் போது, அவை முகம் முழுவதும் பரவக்கூடும்.
ஆண், பெண் என வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் தற்போது சந்திக்கும் பொதுவான பிரச்னைகளுள் ஒன்று முகப்பரு.