ஆரோக்கியம் காக்கும் பூண்டு

சமையலறையில் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருட்களில் ஒன்றான வெள்ளை பூண்டு, இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கு எதிர்ப்பு ஆற்றல் தரக்கூடியது.

இதிலுள்ள அலிசின் என்ற ஆன்டி ஆக்சிடன்ட், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

கெட்ட கொழுப்பான கொலஸ்ட்ரால் உற்பத்தியை தடுக்கும் ஆற்றல், இந்த 'ஆலிசின்' மூலக்கூறுகளுக்கு உள்ளதாக, ஆய்வுகள் கூறுகின்றன.

ரத்தத் தட்டுகள் உறைந்து விடாமல் பாதுகாக்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் இது உதவுகிறது.

இதய பாதிப்புகள், முடக்குவாதம் போன்ற வியாதிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இரைப்பை புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் ஆற்றல், பூண்டுக்கு உள்ளது.

ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற, நோய் தொற்று நுண் கிருமிகளை ஒடுக்கும் பொருட்கள் இதிலுள்ளன.

இதிலுள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி நோய் தொற்றை தடுக்கும்; தீங்கு விளைவிக்கும் 'ஆக்சிஜன் ப்ரீ ரேடிக்கல்'களை விரட்டியடிக்கும் தன்மை கொண்டது.