சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தற்காத்து கொள்ள என்ன செய்யலாம்?

தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது.

இதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுக்காவிட்டால் ப்ளு காய்ச்சலாக மாறும் என்பதால், காய்ச்சல் வந்தவுடனேயே டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

இல்லாவிடில் காய்ச்சல், உடல் சோர்வு, இருமல், சளி அதிகரிக்கும். 10 நாட்கள் கூட இதன் பாதிப்பு இருக்கும்.

நீரிழிவு, இதய நோய், கிட்னி பாதிப்பிற்கு சிகிச்சை எடுப்போருக்கு காய்ச்சலின் வீரியம் அதிகரிக்கும். லேசான காய்ச்சல் வந்தவுடன் உரிய சிகிச்சை எடுக்க வேண்டும்.

காய்ச்சல் வந்தவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணியவும்.

நன்கு கொதிக்க வைத்த நீரை பருக வேண்டும்.

நீர் சத்துக்கள் அதிகமுள்ள குளிர்ச்சியில்லாத சாறுகளை அருந்த வேண்டும்.

காய்ச்சலுடன் பள்ளி, கல்லுாரிக்கு சென்றால் மற்றவர்களுக்கும் எளிதில் பரவும் என்பதால், இதனை அறிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.