மூளையை தின்னும் அமீபா: என்ன பாதிப்பை தரும்?

கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிரிழந்துள்ளது அனைவரையும் இது என்ன புது வரவாக மிரட்டுகிறதே என எண்ண வைக்கிறது.

மூளையை தின்னும் அமீபா எனப்படுவது நெக்லேரியா ஃபோலேரியால் பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் எனும் ஒரு கிருமி தொற்றால் ஏற்படுகிறது.

இந்த அமீபா மூளை திசுக்களை அழித்து மூளை வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் தொற்றுகள் மிகவும் அரிதானவை.

மூளையைத் தின்னும் அமீபாவின் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஆகும்.

அமீபா வேகமாக வளரக்கூடியது என்பதால், இந்த அறிகுறி தொடங்கிய 1 முதல் 18 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிடுகின்றனர்.

இது வெப்பமான நன்னீர் ஏரிகள், ஆறுகளில் இருக்கக்கூடியவை. அரிதாக குடிநீரில் கூட இந்த வகை அமீபா உருவாகும் என கூறப்படுகிறது.

தண்ணீர் தேங்கிய, மாசுபட்ட நீர்நிலைகள், நீச்சல் குளங்களில் குழந்தைகள் குளிக்க அனுமதிக்கக்கூடாது என தற்போது தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.