கோடைக்கால சரும வறட்சி: தேங்காய் பால் போதும்

குளிப்பதற்கு தேவையான தண்ணீரை சூடு செய்து அதில், தேங்காய் பால், ரோஸ் வாட்டர், ரோஜா இதழ்கள் ஆகியவற்றை சேர்த்துக் குளித்து வந்தால்,சருமத்தில் ஏற்படும் சுரசுரப்பு நீங்கி, மென்மையாகவும், ஈரப்பதத்துடன் இருக்கும்.

ஓட்ஸை நன்றாக அரைத்து அதில், தேங்காய் பாலைச் சேர்த்து முகத்தில் தடவி, 15நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் முகப்பருக்கள் நீங்கி, முகம் பொலிவு பெறும்.

கோடைக்காலம் தொடங்கி விட்டதால் வெயில் தாக்கத்தினால், பல வித நோய்களை உருவாக்குவதோடு, சரும அழகையும் பாதிக்கும்.

தேங்காய் பால் சாப்பிட்டு வந்தால், உடல் உஷ்ணம், வயிற்றுப்புண் போன்ற பிரச்னைகள் தீரும்.

தேங்காயில் எண்ணற்ற மூலப்பொருட்களும், தாது உப்புக்களும், வைட்டமின்களும் உள்ளன. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.