ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸ் சாப்பிட்டவுடனே ஒருசிலருக்கு சளி பிடிப்பது ஏன்?
ஐஸ்க்ரீம், கூல்டிரிங்ஸை பொறுத்தவரை அவற்றின் டெம்ப்ரேச்சரை விட, எவ்வளவு சுத்தமாக அவை தயாரிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமானது.
வெளியிடங்களில் ஜூஸ் குடிக்கும்போது, அவ்வப்போது அதில் ஐஸ்கட்டிகள் சேர்ப்பர். அவை எவ்வளவு சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டது என்பது கேள்விக்குரியது.
அதேவேளையில் வீட்டில் நாம் ஃப்ரெஷ்ஷாக ஜூஸ் தயாரித்துக் குடிக்கும்போது, அது குளிர்ச்சியாக இருந்தாலும் பிரச்னை வராது.
வெளியிடங்களில் தயாரிக்கப்படும் ஜூஸில் பயன்படுத்தப்படும் பழம், ஐஸ், தண்ணீர், டம்ளர் என அனைத்திலும் சுத்தம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
எப்போதும் அளவுக்கு அதிகமான சூடு அல்லது குளிர்ச்சியாகவோ எதையும் சாப்பிடுவதைத் தவிர்த்து, மிதமான சூடு அல்லது குளிர்ச்சியில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது சரியானது.
ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸை சாப்பிட்டவுடன் சுடுநீர் குடித்தால், சளி பிடிக்காது என்ற கருத்தும் பலரிடமும் உள்ளது. ஆனால், அறிவியல்ரீதியான காரணங்கள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
குளிர்ச்சியாகச் சாப்பிடும்போது தொண்டையில் ஏற்படும் ரத்த ஓட்டக் குறைவை தான் சுடுநீர் சமப்படுத்தும்.
பொதுவாகவே வெயில்நாட்களில் தொற்று பாதிப்பு குறைவாக இருக்கும். அதேவேளையில், மழை மற்றும் குளிர்காலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் முடிந்தளவு தவிர்க்கலாம்.