முளைகட்டிய தானியங்களை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

முளைக்கட்டிய தானியங்களை இளம் வயதினர் மற்றும் நடுத்தர வயதினர் எடுத்துக் கொள்ளலாம்.

குழந்தைகள் மற்றும் வயதானோர்களுக்கு கொடுக்க கூடாது.

அடிக்கடி நோய்வாய்படுவோருக்கு முளைக்கட்டிய தானியங்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

சிலர் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடும் போது, வயிறு உப்புசம் ஏற்பட்டால் சாப்பிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

குழந்தைகள் மற்றும் வயதானோருக்கு கொடுக்கும் போது, அதில் உள்ள அதிகப்படியான பாக்ட்ரியாக்கள் வயிற்று போக்கை உண்டு பண்ணலாம். ஆகவே இதை தவிர்ப்பது நல்லது.

இதை தவிர முளைக்கட்டிய தானியங்களை கொடுக்க விரும்பினால், காலை 11 மணியளவில் லேசாக வேகவைத்து அதில், மிளகு தூள், எலுமிச்சை சாறு கலந்து சாலட் போல் தயார் செய்து கொடுக்கலாம்.

உடல் ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம்.

செரிமான பிரச்னை உள்ளவர்கள் இட்லி பாத்திரத்தில் லேசாக வேகவைத்து சாப்பிடலாம்.

இல்லாவிட்டால், 11 மணியளவில் மோருடன் சேர்த்து சாலட் போல் தயார் செய்து சாப்பிடலாம்.