பச்சை பட்டாணி சீசனாச்சே.. மிஸ் பண்ணாதீங்க...

பிரியாணி முதல் உப்மா வரை பச்சை பட்டாணியை வெஜ் ஐட்டத்தில் எதில் சேர்த்தாலும் அதன் சுவையே வேற லெவல் தான்.

நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம், புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மற்றும் ஒமேகா சிக்ஸ் கொழுப்பு அமிலங்கள் என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்ற வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் போலேட் ஆகிய சத்துக்கள் பச்சை பட்டாணியில் உள்ளன.

பட்டாணியில் உள்ள நியசின் என்னும் சத்து, நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் உற்பத்தி ஆகுவதை தடுத்து, உடலுக்கு நன்மை பயக்கும் கொலஸ்ட்ரால் வகையை மேம்படுத்துகிறது.

பச்சை பட்டாணியில் புரதம் மற்றும் நார்ச்சத்து போன்றவை மிகுதியாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் வரும்.

பட்டாணியில் இருக்கும் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பிற சத்துகள் உங்கள் உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைக்கும்.

ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்துகள் பட்டாணியில் இருந்து கிடைக்கிறது. இதை தொடர்ந்து சாப்பிடுவதால் மலசிக்கல் போன்ற பிரச்சனைகள் படிப்படியாக சீராகும்.

பட்டாணியில் கரோட்டினாய்டு நிறமி லுடின் ஜீயாக்சாண்டின் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான கண் பார்வைக்கு உதவும்.