சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் அன்னாசிப்பழத்தின் பங்கு !

அன்னாசிப்பழத்தில் நிறைந்துள்ள புரோமைலின் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் சருமம், கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், அடிக்கடி உணவில் இதை சேர்க்கலாம்.

இதிலுள்ள என்சைம்கள், வைட்டமின் சி வேர்க்கால்களை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

புரதச்சத்து சேதமடைந்த கூந்தலை வலுப்படுத்துகிறது. எனவே, சிறிதளவு அன்னாசி சாறு, தயிர் சேர்த்து ஹேர் பேக் ஆக பயன்படுத்தலாம்.

அன்னாசியின் அழற்சி எதிர்ப்பு தன்மை பொடுகு, அரிப்பு போன்றவற்றை குறைக்க உதவுகிறது.

அன்னாசிப்பழத்திலுள்ள வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முகப்பரு, வெயில் பாதிப்புகளை தவிர்க்க உதவுகிறது. உடலை நீரேற்றமாக வைப்பதால் சருமம் பளபளப்பாகிறது.

அடிக்கடி ஒரு டம்ளர் அன்னாசி ஜூஸை குடித்துவர நாளடைவில் முகப்பருக்கள் மற்றும் தழும்புகளை குறைத்து பொலிவான சருமத்துக்கு வழிவகுக்கிறது.

வயதாகும்போது சருமம் அதன் பொலிவை இழக்கத் துவங்கும்; சுருக்கங்களை உணரலாம். அதேவேளையில் அன்னாசியில் உள்ள பண்புகள் இளமையான தோற்றத்தை பராமரிக்க உதவுகிறது.

இதன் என்சைம்கள் சருமத்திலுள்ள இறந்த சருமச் செல்களை அகற்ற உதவுவதால், அன்னாசிப்பழத்தை மசித்து, பப்பாளி மற்றும் தேனுடன் கலந்து பேஸ் பேக் ஆக பயன்படுத்தலாம்.