கம்ப்யூட்டரில் பணிபுரிபவர்களுக்கு கண்களில் நீர் வடிதல், எரிச்சலை தவிர்க்க !

எல்சிடி.,யிலிருந்து எல்இடி மானிட்டருக்கு மாற வேண்டும். மானிட்டர் டிஸ்பிளே செட்டிங்கை நமது சுற்றுசூழலின் வெளிச்சத்துக்கு ஏற்ப மாற்றி வைக்கவும்.

கம்ப்யூட்டரை பயன்படுத்தும் அறையில் போதுமான வெளிச்சம் அவசியம்.

மானிட்டரின் திரை நமது கண் அளவை விட சிறிது கீழே இருக்க வேண்டும்.

20:20:20 என்ற எளிய பயிற்சியை செய்யுங்கள். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 அடி தொலைவில் உள்ள பொருளை 20 முறை கண்களை இமைத்து பார்க்க வேண்டும்.

கண்களுக்கு ஓய்வு அவசியம். வேலை தவிர மற்ற நேரங்களில் ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் பார்ப்பதை தவிர்க்கவும்.

ஆண்டிற்கு ஒரு முறை கண் பரிசோதனை அவசியம்.