சிறுவர்கள் கண்களை அடிக்கடி தேய்க்க காரணமும்.. தீர்வும்...!
கண்களில் அரிப்பு, தண்ணீர் வருவது கண்விழியில் அலர்ஜியின் அறிகுறி.
முன்பு குழந்தைகளுக்கு இரவில் நிலவை காட்டி உணவு ஊட்டுவர். இதனால் குழந்தைகள் நான்கு திசைகளிலும் பார்க்கும். குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் கண்களுக்கு பயிற்சி கிடைத்தது.
தற்போது குழந்தை, சிறுவர்கள் உணவு சாப்பிட மறுத்தால்,
அவர்களை சந்தோஷப்படுத்துவதாக நினைத்து ஸ்மார்ட்போன்களை கொடுக்கின்றனர். இது
முற்றிலும் தவறு.
இதனால் கண் விழி படலத்தில் அலர்ஜி ஏற்படுகிறது. கண்ணில் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் வரும். காலப்போக்கில் பார்வை பாதிக்கும் அபாயமுள்ளது.
தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் ஸ்மார்ட்போன்,
டி.வி. பார்க்கும் நேரம் அதிகரிக்கும். இதனை கட்டாயமாக கட்டுப்படுத்த
வேண்டும்.
கேரட், கீரை, காய்கறி வகைகள், மீன், முட்டை, பால் இதில் ஏதாவது தினமும் ஒன்றிரண்டு சாப்பிட தர வேண்டும்.
தினமும் படிப்பு தொடர்பாக 1 மணி நேரம் ஸ்மார்ட்போன் பார்க்க அனுமதிக்கலாம்.
ஓவியம் வரைவது, மைதானத்தில் ஓடுவது, விளையாடுவதால் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பார்க்கும் பழக்கம் குறைய வாய்ப்புள்ளது.