இதழ்கள் சிவக்க இதோ டிப்ஸ்.. டிப்ஸ்..
ஒரு சில காரணங்களால் சிலருக்கு உதடுகள் கருமையாக காணப்படும். குழந்தை பருவத்தில் அவை சிவந்து காணப்பட்டாலும் இப்படி நேரக்கூடும். அவற்றை மீண்டும் சிவப்பாக்க அழகுக்குறிப்புகள் இதோ...
ஸ்ட்ராபெர்ரி சாறுடன் பெட்ரோலியம் ஜெல்லி கலந்து இரவு தூங்கும் போது உதட்டில் தடவி வந்தால் நிறம் மாறும்.
கற்றாழை ஜெல்லில் அலோயின் எனும் வேதிப்பொருள் உள்ளது. கற்றாழையை உதட்டில் தடவிவர நல்ல நிறம் கொடுக்கும்.
பீட்ரூட் சாறு உதடுகளிலிருக்கும் கருமை நிறத்தை போக்கவும், உதடுகள் வெடிப்புகள் நீங்கவும் உதவும்
எலுமிச்சை சாற்று உடன் தேன் சேர்த்து உதடுகளில் தேய்து வந்தால் நல்ல மாற்றம் இருக்கும்.
காய்ச்சாத பாலுடன் மஞ்சள் சேர்த்து உதட்டின் மீது தடவி பேக் போல் போடவும். 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். உதட்டின் கருமை மறையக்கூடும்.
வெள்ளரிக்காய்யில் சாறு எடுத்து உதட்டில் தடவ அவை கருமையை மங்கச் செய்து உதட்டிற்கு சிவப்பழகை தரும்